பெட்ரோல், டீசல் விலை ரு.2 குறைப்பு


பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வங்கிக் கணக்கை பயன்படுத்தி சமையல் எரிவாயு உருளை மானியம் பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு


வங்கிக் கணக்கை பயன்படுத்தி சமையல் எரிவாயு உருளை மானியம் பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு

“சமையல் எரிவாயு உருளைக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை; வங்கிக் கணக்கு எண்ணை பயன்படுத்தி மானியத்தைப் பெறலாம்’ என மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மக்களவையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை கூறியதாவது:

அரசு மானியத்தை நேரடியாக பெறும் திட்டத்தில் (டிபிடிஎல்) சேரும் அனைவருக்கும், சந்தை விலையிலேயே சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும். அதன்பிறகு, அவர்களின் வங்கிக் கணக்கில் அரசு மானியத் தொகை செலுத்தப்படும்.

இந்த திட்டத்தில் சேரும் வாடிக்கையாளருக்கு அவர்கள் வாங்கும் முதல் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் தொகை, உருளை வாங்குவதற்கு முன்னரே வங்கிக் கணக்கில் முன்தொகையாக (அட்வான்ஸ்) செலுத்தப்படும். இது, வாடிக்கையாளர்கள் முதல் உருளை பெறும்போது மட்டுமே பொருந்தும்.

அரசு மானியத்தை நேரடியாக பெறும் திட்டத்தில் 2 வழிகளில் மக்கள் சேரலாம். ஒன்று, ஆதார் எண் வைத்திருப்பவர்கள், அந்த எண்ணை, எரியாவு முகவரிடமும், வங்கியிடமும் அளித்து மானியத்தைப் பெறலாம்.

இரண்டாவதாக, ஆதார் எண் இல்லாதவர்கள், தங்கள் வங்கிக் கணக்கை அளிப்பதன் மூலம், அரசு மானியத்தைப் பெறலாம். அதாவது, ஆதார் எண் இல்லாததை காரணமாக கொண்டு, அரசு மானியம் மக்களுக்கு வழங்கப்படாமல் நிராகரிப்படுவதை தவிர்ப்பதற்காக, சில திருத்தத்துடன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 1ஆம் தேதி முதல், நேரடி அரசு மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அன்றைய தினத்தில் இருந்து, அந்த திட்டத்தில் சேருவதற்கு 3 மாதகாலம் வரை மக்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கால கட்டத்தில், நேரடி அரசு மானியம் வழங்கும் திட்டத்தில் சேராதவர்களுக்கும், மானியத்துடனேயே சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும். அந்த 3 மாத காலத்திலும், அந்த திட்டத்தில் சேராமல் யாரும் இருக்கும் பட்சத்தில், மேலும் 3 மாத கால அவகாசம் கூடுதலாக வழங்கப்படும்.

அப்போது அக்காலகட்டத்தில் அவர்களுக்கு சந்தை விலையிலேயே உருளைகள் வழங்கப்படும். அதற்கான மானித் தொகை, அரசு திட்டத்தில் சேர்ந்தவுடன் அவர்களது பின்னர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

ஆனால் கூடுதலாக வழங்கப்பட்ட 3 மாத அவகாசத்திலும் யாரும் அந்த திட்டத்தில் யாரும் சேரவில்லையென்றால், அவர்களுக்கான அரசு மானியம் நிறுத்தப்படும். அதன்பிறகு, அந்த முகவர்களுக்கு சந்தை விலையிலேயே சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும். ஆனால் கூடுதல் கால அவகாசம் முடிந்தபிறகு, ஒருவேளை அவர்கள், அரசு திட்டத்தில் சேர்ந்தால், அவர்கள் வாங்கும் சமையல் எரிவாயு உருளைக்கு அவர்களுக்கு முன்தொகை அல்லது மானியம் முறைப்படி வழங்கப்படும் என்றார் அவர்.

திருமணப்பதிவு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும்


“திருமணத்தைப் பதிவு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும்’

First Published : 13 December 2014 06:46 AM IST

திருமணத்தைப் பதிவு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும் என்று விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம் ரைட் தொண்டு நிறுவனம், புதுவை அதேகொம் பின்னகம், மைத்திரி பின்னகம் சார்பில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை எதிர்ப்பு தின பிரசார கருத்தரங்கம் திருச்சிற்றம்பலத்தில், அண்மையில் நடந்தது.

தொண்டு நிறுவனங்கள் சார்பில், ஜிடி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நடத்திய இக்கருத்தரங்குக்கு ரைட் தொண்டு நிறுவன நிர்வாகி ரூபாதேவி தலைமை வகித்தார். ஜிடி எலக்ட்ரானிக்ஸ் நிறுவன மேலாளர் அல்போன்ஸ், உதவி மேலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். அவேர் தொண்டு நிறுவன திட்ட மேலாளர் ராமசாமி வரவேற்றார்.

புதுவை கூட்டுக் குரல் தொண்டு நிறுவன இயக்குநர் பெருமாள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கருத்துரை வழங்கினார்.

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் வழிமுறைகளை விவரித்ததோடு, திருமணமான பெண்கள், திருமணத்தை பதிவு செய்ய வேண்டும், பதிவு செய்ய தவறுவதே குடும்ப வன்முறைக்கு முதல் இலக்காக அமைகிறது என்று அறிவுறுத்தினார்.

பெஸ்ட் நிறுவன இயக்குநர் லெனின், கலையரசி ஆகியோர் பங்கேற்று, மத்திய அரசு கொண்டு வந்த குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கினர்.

கருத்தரங்கில், அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

சட்ட விழிப்புணர்வே பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கும்


சட்ட விழிப்புணர்வே பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கும்

image1 image0
சட்ட விழிப்புணர்வுதான் பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கும் என புதுச்சேரி முதன்மை குற்றவியல் நடுவர் ஆர். விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.

அதேகொம் பின்னகம், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 16 நாள் தொடர் பிரசாரத்தில் “சந்தையின் நியாயத்தின் குரல்’ என்ற குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் பெத்திசெமினார் பள்ளி எதிரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதேகொம் பின்னக நிர்வாக இயக்குநர் ப.லலிதாம்பாள் அறிமுகவுரை ஆற்றினார். கள விளம்பர அதிகாரி தி.சிவக்குமார் தலைமை வகித்தார்.

இதில் முதன்மைக் குற்றவியல் நடுவர் விஐயகுமாரி விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது: சட்ட விழிப்புணர்வுதான் பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாக்கும்.

மேலும் பெண்கள் தாங்களுக்கு பிரச்னை வரும் போதுதான் சட்டத்தின் தீர்வை நோக்கி வருகிறார்கள்.

இதனால் கால தாமதமாக தீர்வு கிடைக்கிறது. இதை தவிர்க்க பெண்கள் சட்ட விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞர் மு.பெருமாள், அகில இந்திய வானொலி நிலைய முதுநிலை அறிவிப்பாளர் உமா மோகன், வழக்குரைஞர்கள் சிவகணபதி, மேரி அன்னா தயாவதி, ஆகியோர் கலந்து கொண்டனார்.

இதற்கான ஏற்பாடுகளை அதேகொம் பின்னக ஒருங்கிணைப்பாளார்கள் ராஜா, அர்ச்சனா, பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

ஞாயிறுசந்தையின் நியாயத்தின் குரல்

image0

குடும்பவன்முறை குறித்த பிரச்சாரம் புதுச்சேரி முதன்மை குற்றவியல் நடுவர் துவக்கி வைத்தார்.

image0

நியாயமான தீர்ப்பு கிடைக்க சட்ட விழிப்புணர்வு அவசியம்

 புதுச் சேரி அதேகொம் பின்ன கம், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ஞாயிறு சந்தையின் நியாயத்தின் குரல் என்னும் தலைப்பில் குடும்ப வன் முறை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மகாத்மா காந்தி வீதியில் நேற்று நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை வரவேற்றார். அதேகொம் பின்னக நிர் வாக இயக்குனர் லலிதாம் பாள் நோக்கவுரை ஆற்றி னார்.
கள விளம்பர அதி காரி சிவகுமார் தலைமை தாங்கினார். முதன்மை குற்றவியல் நீதிபதி விஜயகுமாரி பிரசாரத்தை துவக்கி வைத்து பேசியதாவது, சட்ட விழிப்புணர்வுதான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து விடுதலை பெற்ற தரும்.
பெண்களுக்கு பிரச்னை ஏற்படும் போது தான் அவர்கள் சட்டத்தை நாடுகிறார்கள. இதனால் அவர்களுக்கான நியாய மான தீர்ப்பு தாமதாக கிடைக்கிறது. இதை தவிர்க்க பெண்கள் சட்ட விழிப்புணர்வு பெற வேண் டும் என கூறினார்.
வழக்கறிஞர்கள் பெரு மாள், அன்னா தயாவதி, சிவ.கணபதி, வானொலி நிலைய முதல்நிலை அறிவிப்பாளர் உமா மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதற்கான ஏற்பாடு களை அதேகொம் பின்னக ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, ஆனந்தி, அர்ச்சனா, பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

image1

பெண்களுக்கு எதிரான வன்முறைகளே தற்கொலைக்கு காரணம்


“பெண்களுக்கு எதிரான வன்முறைகளே தற்கொலைக்கு காரணம்’

image0

“பெண்களுக்கு எதிரான வன்முறைகளே தற்கொலைக்கு காரணம்’

பெண்களுக்கு எதிரான வன்முறைகளே அவர்களின் தற்கொலைக்கு காரணம் என கிராமப்புற காவல் துறை கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி தெரிவித்தார்.

அதேகொம் பின்னகம், நேயம் அமைப்பு மற்றும் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த 16 நாள் தொடர் மிதிவண்டி பிரசாரம் மதகடிப்பட்டு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கிராமப்புற காவல் துறை கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி பிரசாரத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள் பற்றி இன்று பல்வேறு அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. எனவே பெண்களுக்கு தேவையான பாதுகாப்பும், ஆலோசனைகளும் கிடைக்கின்றன.

குடும்பத்தில் பெண்களுக்கு சமமாக, சக மனிதராக மரியாதை வழங்கும்போதுதான் அந்த குடும்பம் மகிழ்ச்சியாக விளங்கும். பெண்களின் தற்கொலைக்கு காரணம் அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற வன்முறை சம்பவங்களே என்றார் தெய்வசிகாமணி.

நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் சீனு.பெருமாள் தலைமை வகித்தார். கூட்டுக்குரல் நாடகக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு பாடல்கள் பாடினர். மிதிவண்டி பிரசாரம் மதகடிப்பட்டில் தொடங்கி திருபுவனை, திருவண்டார் கோயில், அரியூர், பங்கூர், ஆரியப்பாளையம், பிச்சவீரன்பேட் ஆகிய பகுதிகள் வழியாக நடைபெற்றது.

இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மிதிவண்டியுடன் கலந்து கொண்டனர். குடும்ப வன்முறை குறித்த துண்டு பிரசுரமும் பிரசாரத்தின்போது வழங்கப்பட்டது. இதில் கூட்டுக்குரல் நாடக இயக்க உறுப்பினர்கள் ஏழுமலை, முருகன், கு.மஞ்சுளா, வாலினி, கஸ்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

South Indian Conference on Violence against Women

The South Indian Conference was jointly organized by ADECOM Network and Maitri Network in Reena Mahal on 25.11.2014 at 9.00 am to 1.30 pm. In that programme ADECOM invited women leaders from Karnataka, Kerala, Andhra, Thelungana, Tamil Nadu and Puducherry.10733995_10202287127574151_6258603196341523416_n (1)1507557_10202287135614352_3680784162944487884_n

It also invited the chief guests Shri. N.G. Pannirselvam,the Hon’ble  local administration minister, Govt of Puducherry to give the presidential address and Shri. P. Rajavelu, Hon’ble welfare minister, Gov.t of Puducherry to gave the special address and Mrs. Vanmathi, deputy director of women and child development department, Mrs. Nagajothi, member of women commission, and Ms. Priya sub inspector of police to gave the felicitation.

சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அவலம்

இந்தியாவில் 77% பதின்பருவ சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அவலம்: ஐ.நா. தகவல்

rape

  • இந்தியாவில் உள்ள 15 முதல் 19 வயதுக்குள்பட்ட பதின்பருவ சிறுமிகளில் 77 சதவீதத்தினர் பாலியல் துன்பறுத்தலுக்கு ஆளாகும் அவலம் நிகழ்கிறது என்று ஐ.நா. அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • ஐ.நா. அவையின் யுனிசெஃப் அமைப்பு சார்பில் இந்தியா உள்பட உலகின் 190 நாடுகளில் “கண்ணுக்குத் தெரிந்தும் புலப்படாதவை’ என்ற தலைப்பில் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை வெளியான அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டதாவது:
  • உலகம் முழுவதும் உள்ள 2 முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்களது பெற்றோர் அல்லது பொறுப்பாளர்களால் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். ஏறத்தாழ 100 கோடி குழந்தைகள் இந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
  • அஸர்பைஜான், கம்போடியா, ஹைட்டி, இந்தியா, லைபீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 50 சதவீத பெண் குழந்தைகள் தங்களது தாய் அல்லது மாற்றாந்தாய் ஆகியோரால் அடித்துத் துன்புறுத்தப்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
  • உலக அளவில் 2012ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட இளம்பெண்கள் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது. அந்த ஆண்டில் மட்டும் பச்சிளம் சிசு முதல் 19 வயதுக்குள்பட்ட சுமார் 9,400 பெண் குழந்தைகள் இந்தியாவில் கொல்லப்பட்டுள்ளனர்.
  • 15 முதல் 19 வயதுக்குள்பட்ட பதின்பருவ இந்தியச் சிறுமிகளில் 77 சதவீதத்தினர் தங்களது வாழ்வில் ஒரு முறையாவது கட்டாயப் பாலியல் உறவுக்கு ஆளாகின்றனர். 34 சதவீதத்தினர் கணவர் அல்லது தோழர்களால் உடல்ரீதியான, வன்புணர்ச்சி அல்லது மன உளைச்சல் போன்ற வன்கொடுமைகளுக்கு நேரிடுகின்றனர்.
  • இதில், திருமணம் ஆகாத பெண்களோ தங்களது தாய், தந்தை, உறவினர்கள், ஆசிரியர்களாலேயே தாக்கப்படும் நிலையும் உள்ளது.
  • மனைவியை அடித்துத் துன்புறுத்துவது என்பது கணவர்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாகவே கருதும் வளமுறை, தெற்காசியாவில் குறிப்பாக இந்தியா, வங்கதேசம் ஆகிய நாட்டுச் சமூகங்களில் புரையோடியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Legal Camp to Anganwadi Teachers

ADECOM  organized legal camp to Anganwadi teachers and mothers in three Anganwadi centres situated in Anitha Nagar, Puducherry.  ADECOM team Mr. Raja and Ms. Ananthi coordinated the event.  In women and children department the welfare officer Mr. Ravichandiran gave the special speech about violence against women in that area.  Ms. Lalida from ADECOM delevered the key note address that how women are facing the domestic violence and how to get the support for legal help.  She mentioned the DVAW 2005 act and explained to the women about the protection and rehabilitation in their life.

DSCF9578 DSCF9570

 

Totally 27 women mothers and 5 teachers were benefited through this event.  They came to know about ADECOM Network their services on legal support.