சட்ட விழிப்புணர்வே பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கும்


சட்ட விழிப்புணர்வே பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கும்

image1 image0
சட்ட விழிப்புணர்வுதான் பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கும் என புதுச்சேரி முதன்மை குற்றவியல் நடுவர் ஆர். விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.

அதேகொம் பின்னகம், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 16 நாள் தொடர் பிரசாரத்தில் “சந்தையின் நியாயத்தின் குரல்’ என்ற குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் பெத்திசெமினார் பள்ளி எதிரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதேகொம் பின்னக நிர்வாக இயக்குநர் ப.லலிதாம்பாள் அறிமுகவுரை ஆற்றினார். கள விளம்பர அதிகாரி தி.சிவக்குமார் தலைமை வகித்தார்.

இதில் முதன்மைக் குற்றவியல் நடுவர் விஐயகுமாரி விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது: சட்ட விழிப்புணர்வுதான் பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாக்கும்.

மேலும் பெண்கள் தாங்களுக்கு பிரச்னை வரும் போதுதான் சட்டத்தின் தீர்வை நோக்கி வருகிறார்கள்.

இதனால் கால தாமதமாக தீர்வு கிடைக்கிறது. இதை தவிர்க்க பெண்கள் சட்ட விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞர் மு.பெருமாள், அகில இந்திய வானொலி நிலைய முதுநிலை அறிவிப்பாளர் உமா மோகன், வழக்குரைஞர்கள் சிவகணபதி, மேரி அன்னா தயாவதி, ஆகியோர் கலந்து கொண்டனார்.

இதற்கான ஏற்பாடுகளை அதேகொம் பின்னக ஒருங்கிணைப்பாளார்கள் ராஜா, அர்ச்சனா, பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply