திருமணப்பதிவு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும்


“திருமணத்தைப் பதிவு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும்’

First Published : 13 December 2014 06:46 AM IST

திருமணத்தைப் பதிவு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும் என்று விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம் ரைட் தொண்டு நிறுவனம், புதுவை அதேகொம் பின்னகம், மைத்திரி பின்னகம் சார்பில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை எதிர்ப்பு தின பிரசார கருத்தரங்கம் திருச்சிற்றம்பலத்தில், அண்மையில் நடந்தது.

தொண்டு நிறுவனங்கள் சார்பில், ஜிடி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நடத்திய இக்கருத்தரங்குக்கு ரைட் தொண்டு நிறுவன நிர்வாகி ரூபாதேவி தலைமை வகித்தார். ஜிடி எலக்ட்ரானிக்ஸ் நிறுவன மேலாளர் அல்போன்ஸ், உதவி மேலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். அவேர் தொண்டு நிறுவன திட்ட மேலாளர் ராமசாமி வரவேற்றார்.

புதுவை கூட்டுக் குரல் தொண்டு நிறுவன இயக்குநர் பெருமாள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கருத்துரை வழங்கினார்.

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் வழிமுறைகளை விவரித்ததோடு, திருமணமான பெண்கள், திருமணத்தை பதிவு செய்ய வேண்டும், பதிவு செய்ய தவறுவதே குடும்ப வன்முறைக்கு முதல் இலக்காக அமைகிறது என்று அறிவுறுத்தினார்.

பெஸ்ட் நிறுவன இயக்குநர் லெனின், கலையரசி ஆகியோர் பங்கேற்று, மத்திய அரசு கொண்டு வந்த குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கினர்.

கருத்தரங்கில், அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply