சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அவலம்

இந்தியாவில் 77% பதின்பருவ சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அவலம்: ஐ.நா. தகவல்

rape

  • இந்தியாவில் உள்ள 15 முதல் 19 வயதுக்குள்பட்ட பதின்பருவ சிறுமிகளில் 77 சதவீதத்தினர் பாலியல் துன்பறுத்தலுக்கு ஆளாகும் அவலம் நிகழ்கிறது என்று ஐ.நா. அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • ஐ.நா. அவையின் யுனிசெஃப் அமைப்பு சார்பில் இந்தியா உள்பட உலகின் 190 நாடுகளில் “கண்ணுக்குத் தெரிந்தும் புலப்படாதவை’ என்ற தலைப்பில் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை வெளியான அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டதாவது:
  • உலகம் முழுவதும் உள்ள 2 முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்களது பெற்றோர் அல்லது பொறுப்பாளர்களால் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். ஏறத்தாழ 100 கோடி குழந்தைகள் இந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
  • அஸர்பைஜான், கம்போடியா, ஹைட்டி, இந்தியா, லைபீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 50 சதவீத பெண் குழந்தைகள் தங்களது தாய் அல்லது மாற்றாந்தாய் ஆகியோரால் அடித்துத் துன்புறுத்தப்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
  • உலக அளவில் 2012ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட இளம்பெண்கள் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது. அந்த ஆண்டில் மட்டும் பச்சிளம் சிசு முதல் 19 வயதுக்குள்பட்ட சுமார் 9,400 பெண் குழந்தைகள் இந்தியாவில் கொல்லப்பட்டுள்ளனர்.
  • 15 முதல் 19 வயதுக்குள்பட்ட பதின்பருவ இந்தியச் சிறுமிகளில் 77 சதவீதத்தினர் தங்களது வாழ்வில் ஒரு முறையாவது கட்டாயப் பாலியல் உறவுக்கு ஆளாகின்றனர். 34 சதவீதத்தினர் கணவர் அல்லது தோழர்களால் உடல்ரீதியான, வன்புணர்ச்சி அல்லது மன உளைச்சல் போன்ற வன்கொடுமைகளுக்கு நேரிடுகின்றனர்.
  • இதில், திருமணம் ஆகாத பெண்களோ தங்களது தாய், தந்தை, உறவினர்கள், ஆசிரியர்களாலேயே தாக்கப்படும் நிலையும் உள்ளது.
  • மனைவியை அடித்துத் துன்புறுத்துவது என்பது கணவர்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாகவே கருதும் வளமுறை, தெற்காசியாவில் குறிப்பாக இந்தியா, வங்கதேசம் ஆகிய நாட்டுச் சமூகங்களில் புரையோடியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply