பெண்களுக்கு எதிரான வன்முறைகளே தற்கொலைக்கு காரணம்


“பெண்களுக்கு எதிரான வன்முறைகளே தற்கொலைக்கு காரணம்’

image0

“பெண்களுக்கு எதிரான வன்முறைகளே தற்கொலைக்கு காரணம்’

பெண்களுக்கு எதிரான வன்முறைகளே அவர்களின் தற்கொலைக்கு காரணம் என கிராமப்புற காவல் துறை கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி தெரிவித்தார்.

அதேகொம் பின்னகம், நேயம் அமைப்பு மற்றும் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த 16 நாள் தொடர் மிதிவண்டி பிரசாரம் மதகடிப்பட்டு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கிராமப்புற காவல் துறை கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி பிரசாரத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள் பற்றி இன்று பல்வேறு அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. எனவே பெண்களுக்கு தேவையான பாதுகாப்பும், ஆலோசனைகளும் கிடைக்கின்றன.

குடும்பத்தில் பெண்களுக்கு சமமாக, சக மனிதராக மரியாதை வழங்கும்போதுதான் அந்த குடும்பம் மகிழ்ச்சியாக விளங்கும். பெண்களின் தற்கொலைக்கு காரணம் அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற வன்முறை சம்பவங்களே என்றார் தெய்வசிகாமணி.

நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் சீனு.பெருமாள் தலைமை வகித்தார். கூட்டுக்குரல் நாடகக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு பாடல்கள் பாடினர். மிதிவண்டி பிரசாரம் மதகடிப்பட்டில் தொடங்கி திருபுவனை, திருவண்டார் கோயில், அரியூர், பங்கூர், ஆரியப்பாளையம், பிச்சவீரன்பேட் ஆகிய பகுதிகள் வழியாக நடைபெற்றது.

இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மிதிவண்டியுடன் கலந்து கொண்டனர். குடும்ப வன்முறை குறித்த துண்டு பிரசுரமும் பிரசாரத்தின்போது வழங்கப்பட்டது. இதில் கூட்டுக்குரல் நாடக இயக்க உறுப்பினர்கள் ஏழுமலை, முருகன், கு.மஞ்சுளா, வாலினி, கஸ்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply